ஓம் ஓம் எனும் பொருளே போற்றி
ஓம் ஓங்கார தெய்வமே போற்றி
ஓம் உயர்தவம் ஆள்வாய் போற்றி
ஓம் உள்ளன்பு உடையாய் போற்றி
ஓம் சங்கரி சிங்காரியே போற்றி
ஓம் உலகெல்லாம் மலர்ந்தவளே போற்றி
ஓம் ஒப்புமை இலாதவளே போற்றி
ஓம் சுயம்பாய் நின்றவளே போற்றி
ஓம் சுடராய் ஒளிர்ந்தவளே போற்றி
ஓம் மருவத்தூர் தாயே போற்றி
ஓம் மனமுறை மருந்தே போற்றி
ஓம் மங்கள மடந்தையே போற்றி
ஓம் மாசெலாம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் மலர்மிசை அமர்ந்தாய் போற்றி
ஓம் மாந்தர்தம் குறை களைவாய் போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி
ஓம் மட்டிலா சித்தியே போற்றி
ஓம் சித்தாடும் வல்லியே போற்றி
ஓம் சிந்தனை யருள்வாய் போற்றி
ஓம் செந்தண்மை மலரே போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் ஆன்மிக கொழுந்தே போற்றி
ஓம் நிதியே நிறைவே போற்றி
ஓம் நினெவோடு போற்றி
ஓம் அஞ்சலென்று அணைப்பாய் போற்றி
ஓம் அருள்வாக்காமகோமளமே போற்றி
ஓம் மழையென வருள்வாய் போற்றி
ஓம் மதியென ஒளிர்வாய் போற்றி
ஓம் மக்களுக்கு அருள்வாய் போற்றி
ஓம் மருவூரின் கண்ணே போற்றி
ஓம் ஆலயம் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆன்மீக அவதாரமே போற்றி
ஓம் திருப்பதி நின்றாய் போற்றி
ஓம் திகழ்பதி எலாம் நீயே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆறாதார அமிழ்தமே போற்றி
ஓம் லலாடத்தின் அமிழ்தமே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தமே போற்றி
ஓம் முக்கண் மடந்தையே போற்றி
ஓம் சங்கரனை படைத்தவளே போற்றி
ஓம் ஐங்கரனை பயந்தவளே போற்றி
ஓம் ஆறுமுகனை தந்தவளே போற்றி
ஓம் நாரணணனாய் நின்றவளே போற்றி
ஓம் நான்முகனாய் ஆனவள் போற்றி
ஓம் புத்திக்கு வித்தே போற்றி
ஓம் புனலுக்கு தன்மையே போற்றி
ஓம் நிலத்திற்கு திண்மையே போற்றி
ஓம் நெருப்பிற்கு வெம்மையே போற்றி
ஓம் காற்றிற்கு உணர்வே போற்றி
ஓம் காலத்திற்கு இறைவியே போற்றி
ஓம் கவலைக்கு மருந்தே போற்றி
ஓம் காப்பிற்கு நீயே போற்றி
ஓம் மனத்திற்கு மகிழ்வே போற்றி
ஓம் மதி தனக்கு விருந்தே போற்றி
ஓம் பண்ணிற்கு சுவையே போற்றி
ஓம் பாவிற்கு நயமே போற்றி
ஓம் பக்திக்கு உருக்கமே போற்றி
ஓம் சொல்லிற்கு செல்வியே போற்றி
ஓம் ஜோதிக்கு ஆதியே போற்றி
ஓம் சூட்சுமத்தின் சூட்ச்சுமமே போற்றி
ஓம் அன்பிற்கு தாயே போற்றி
ஓம் ஆதரிக்க தந்தையே போற்றி
ஓம் அரவணைக்க அமர்ந்தவளே போற்றி
ஓம் அறத்திற்கு வள்ளன்மையே போற்றி
ஓம் கண்ணிற்கு கருணையே போற்றி
ஓம் விண்ணிற்கு அணுத்ததுவமே போற்றி
ஓம் எண்ணத்திற்கு எழுச்சியே போற்றி
ஓம் ஏற்றத்திற்கு துணையே போற்றி
ஓம் பரிவிற்கு சக்தியே போற்றி
ஓம் பார்ப்பதற்கு அமைதியே போற்றி
ஓம் அண்டவெளி ஆனாய் போற்றி
ஓம் ஆன்ம ஒளி தருவாய் போற்றி
ஓம் இன்பவொளி நீயே போற்றி
ஓம் இதயவொளி நீயே போற்றி
ஓம் பலர் போற்றும் வாழ்வே போற்றி
ஓம் பாமரர் துணையே போற்றி
ஓம் ஆதியே அந்தமே போற்றி
ஓம் ஜோதியே சுடரே போற்றி
ஓம் சிந்தனை களமே போற்றி
ஓம் சித்தாடும் இடமே போற்றி
ஓம் வந்திப்பார்க்கு வாழ்வே போற்றி
ஓம் வரந்தரு கற்பகமே போற்றி
ஓம் வேம்போடு இணைந்தாய் போற்றி
ஓம் வினைதீர்க்க அமர்ந்தாய் போற்றி
ஓம் நீற்றோடு நிறைந்தாய் போற்றி
ஓம் நிதியோடு மலர்ந்தாய் போற்றி
ஓம் குங்குமம் குழைந்தாய் போற்றி
ஓம் கோயிலாம் அறமே போற்றி
ஓம் காயினை கணிவிப்பாய் போற்றி
ஓம் கருத்தினை தெளிவிப்பாய் போற்றி
ஓம் நடமாடும் தெய்வமே போற்றிஓம் நாயகனும் ஆனவளே போற்றிஓம் பேசும் தேவியே போற்றி
ஓம் பிணி தீர்க்கும் சக்தியே போற்றி
ஓம் மனக்குறை போற்றுவாய் போற்றி
ஓம் மணமுடித்தும் வைப்பாய் போற்றி
ஓம் குணக்குன்றம் ஆனாய் போற்றி
ஓம் குவலயம் காப்பாய் போற்றி
ஓம் குழந்தைமை அருள்வாய் போற்றி
ஓம் அவலங்கள் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீய்ப்பாய் போற்றி
ஓம் எம்மதமும் ஆனாய் போற்றி
ஓம் சித்தர்தம் உறவே போற்றி
ஓம் அறிவுக்கும் அறிவானவளே போற்றி
ஓம் ஆதிபராசக்தி அம்மையே போற்றி